அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதனால், பருப்பு மற்றும் வெள்ளை சீனியின் விலைகள் குறைக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நேற்று (07) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 30 ரூபாவினாலும், வெள்ளை சீனி கிலோ ஒன்றின் மொத்த விலை 40 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
மொத்த விலை குறைவடைந்ததனால் எதிர்வரும் நாட்களில் இவற்றின் சில்லறை விலைகளும் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.