பல கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதன்படி இன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அலுவலகங்களின் ஊழியர்களும் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக நீர்வழங்கல் தொழிற்சங்க கூட்டுக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தம் காரணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் பில்லிங் பிரிவுகளையும் மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. (யாழ் நியூஸ்)