பேரிச்சம்பழத்திற்குக்கான விசேட இறக்குமதி வரியான ரூ.200 ஐ ரூ.199 வினால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்குமுன்னர் ஒரு கிலோ பேரிச்சம்பழத்திற்கு விசேட இறக்குமதி வரியாக 200 ரூபாய் விதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நாளை (08) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேரிச்சம்பழத்திற்கு விசேட இறக்குமதி வரியாக 1 ரூபாய் மட்டுமே விதிக்கப்படவுள்ளது.
எதிர்வரவிருக்கும் ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு நிவாரண நடவடிக்கையாக இந்த 199 ரூபா வரி குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.