இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை இன்று (27) முதல் குறைக்கப்பட்டுள்ள போதிலும் உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய முடியாது என உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய உள்நாட்டில் பால்மாவை உற்பத்தி செய்யும் மில்கோ மற்றும் பெலவத்த நிறுவனம் எந்த விலை குறைப்பையும் செய்யாது என தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பால் கையிருப்பு குறைவடைந்தமையே இதற்குக் காரணம் என மில்கோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் கிட்டத்தட்ட 12 இலட்சம் லீட்டர் பாலை வழங்கி வந்த உள்ளூர் விவசாயிகள் தற்போது 5 இலட்சம் லீட்டர் பால் மட்டுமே வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உள்நாட்டு பால்மா விலையை குறைக்க முடியாது என மில்கோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டாலும், உள்நாட்டு பால்மா விலையை குறைக்க வேண்டிய அவசியமில்லை என பெலவத்த பால்மா உற்பத்தி நிறுவனமும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.