பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி அதிகளவு மருத்துவ மாத்திரைகளை உட்கொண்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி நேற்று (28) பல்கலைக்கழகத்தின் மலசேகர விடுதியில் உள்ள தனது விடுதி அறைக்குள் சுகவீனமடைந்த நிலையில் அவரது நண்பர்களால் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் இன்று அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் அவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)