நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்தை விட 2 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ஆர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
இதன்படி 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.