கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சாய்ந்தமருதில் பாதுகாப்பு இல்லத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சாரா ஜஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரனும் அடங்குவதாக DNA பரிசோதனை உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக புலஸ்தினி மஹேந்திரன் இந்தியாவுக்கு தப்பிச்சென்றார் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே காவல்துறை ஊடகப்பிரிவின் தகவல் வெளியாகியுள்ளது. (யாழ் நியூஸ்)