இன்று (31) முதல் பேருந்து பயண கட்டணம் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
இதற்கமைய 34 ரூபாய் என்ற ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 30 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
புதிய பேரூந்து பயண கட்டணம் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரேன்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
திருத்தம் செய்யப்பட்ட பேரூந்து பயண கட்டண பட்டியலை சகல பேரூந்துகளிலும் காட்சிப்படுத்த வேண்டும் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.