அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் இன்று (02) மேலும் உயர்ந்துள்ளது.
அதன்படி கொள்முதல் விலை 343 ரூபா 97 சதமாகவும், விற்பனை விலை 356 ரூபா 73 சதமாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நேற்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10 மாதங்ளின் பின்னர் மீண்டும் உயர்வைக் காட்டியது. கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் 351 ரூபா 72 சதம் மற்றும் 362 ரூபா 95 சதமாகவும் பதிவாகியிருந்தது.
கடந்த 2022 மே 04 ஆம் திகதிக்கு பின்னர் பதிவான அமெரிக்க டொலருக்கு நிகரான மிகக் குறைந்த ரூபா பெறுமதி இதுவாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், அவுஸ்திரேலிய டொலர், இந்திய ரூபா, கனேடிய டொலர் மற்றும் ஜப்பானிய யென் ஆகியவற்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் அதிகரித்துள்ளது.