இலங்கையின் உத்தியோகபூர்வ ஒதுக்கம் 4.5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாத இறுதியில் உத்தியோகபூர்வ ஒதுக்கத்தின் மதிப்பு 2,121 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இது பெப்ரவரி மாத இறுதியில் 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து 4.5% அதிகரிப்பைக் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய உத்தியோகபூர்வ ஒதுக்கத்தில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான சீனாவின் மக்கள் வங்கியின் பரிமாற்ற வசதியும் உள்ளடங்குகிறது.
இது பயன்பாட்டிற்கான நிபந்தனைக்கு உட்பட்டதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.