அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312.61 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 330.16 ரூபாவாகவும் பதிவாகியது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்து வந்திருந்த போதிலும், கடந்த வாரம் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
எவ்வாறாயினும், நேற்றைய தினம் முதல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மீண்டும் வலுவடைய ஆரம்பித்துள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.84 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 334.93 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.