இரண்டு பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்கள் மற்றும் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, சர்வதேச உறவுகள் தொடர்பான பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பான பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமல் ராஜபக்ஷ போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)