கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் சாட்சிகளிடம் செல்வாக்குச் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவின் பதிவு செய்யப்படாத வாகனம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதியோர மரத்தில் மோதியதில் பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்து இடம்பெற்ற போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தை செலுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் முன்னர் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், விபத்தின் போது வாகனத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா ஓட்டிச் சென்றதாக பொலிஸ் விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)