சமுர்த்தி உள்ளிட்ட ஏனைய நலன்புரி கொடுப்பனவுகளை நூற்றுக்கு 75 வீதம் குறைப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அந்த சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பி.ஏ.பி பஸ்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
சமூக நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்து அரசாங்கம் கொடுப்பனவினை குறைப்பதற்கு தயாராகி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.