காலி - ஹபராதுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றிலுள்ள உடற்பிடிப்பு நிலையமொன்றுக்கு சென்றிருந்த ஜேர்மனிய பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தமை தொடர்பில் அதன் ஊழியரான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
65 வயதான சுற்றுலாப் பயணி ஹபராதுவ காவல்நிலையத்துக்கு அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடற்பிடிப்பின்போது, சந்தேகநபரான ஊழியர் தமது அந்தரங்க பாகங்களை ஸ்பரிசம் செய்ததாக குறித்த பெண் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான விடுதி ஊழியர், இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.
அவர் இன்று காலி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹபராதுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.