இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு படகு சேவை ஆரம்பம்! 50 டாலர்கள் மட்டுமே!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு படகு சேவை ஆரம்பம்! 50 டாலர்கள் மட்டுமே!


யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையே 2023 ஏப்ரல் 29 முதல் பயணிகள் கப்பல் சேவையை தொடங்க இலங்கை மற்றும் இந்திய அரசுகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பான கலந்துரையாடல் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் நேற்றைய தினம் (26) இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்காக காங்கேசன்துறை மற்றும் காரைக்காலில் தலா ஒன்று வீதம் இரண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகங்களை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


படகு சேவைக்காக இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களால் முதலில் படகுகள் வழங்கப்படாது மாறாக இந்திய வெளிவிவகார அமைச்சினால் கோரப்பட்ட டெண்டரின் கீழ் படகுகள் வழங்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 


புதிய பயணிகள் படகு திட்டத்தின் கீழ், ஒரு படகு மொத்தம் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும், ஒவ்வொரு பயணிக்கும் அனுமதிக்கப்பட்ட சாமான்களின் எடை 100 கிலோ இருக்கும், அதே சமயம் ஒரு வழி பயணத்தின் விலை 50 அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.