பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற்று வரும் 266 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை இலங்கை பாராளுமன்றம் வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் கருணாதாச கொடித்துவக்கு ஆகியோர் பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிருபமா ராஜபக்ஷ, சாகல ரத்நாயக்க, உபேக்ஷா ஸ்வர்ணமாலி மற்றும் ரஞ்சன் ராமநாயக்க போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நிருபமா ராஜபக்ஷ, சாகல ரத்நாயக்க, உபேக்ஷா ஸ்வர்ணமாலி மற்றும் ரஞ்சன் ராமநாயக்க போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய பட்டியலை பார்வையிட இங்கே க்லிக் செய்யவும்.
(யாழ் நியூஸ்)