மார்ச் 16, வியாழன் அன்று இலங்கை மற்றும் ஜிம்பாப்வே FIFA தேர்தல்களின் போது வாக்களிப்பதில் இருந்து இடைநிறுத்தப்பட்டன.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 73வது FIFA காங்கிரஸிற்காக உலகக் கால்பந்து நிர்வாகக் குழுவின் (FIFA) உயர்மட்ட கால்பந்து நிர்வாகிகள் உட்பட 2,000 பிரதிநிதிகள் கிகாலியில் சந்தித்தனர்.
FIFA இன் உச்ச சட்டமன்ற அமைப்பான FIFA காங்கிரஸ், FIFAவின் உயர்மட்ட நிர்வாகிகள், கூட்டமைப்புகள் மற்றும் 211 உறுப்பினர் சங்கங்கள் மற்றும் பிற கால்பந்து பங்குதாரர்களின் பிரதிநிதிகளை சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளன.
211 சங்கங்களில் 199 உறுப்பினர்கள் ஜிம்பாப்வேயை இடைநிறுத்துவதற்கான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. அதேநேரம், 197 சங்கங்கள் FIFA தேர்தல்களின் போது வாக்களிப்பதில் இருந்து இலங்கையை கட்டுப்படுத்தும் பிரேரணைக்கு வாக்களித்தன.
அரசியல் தலையீடு காரணமாக இலங்கை கால்பந்து கூட்டமைப்பை FIFA இடைநீக்கம் செய்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
197 countries vote to suspend Sri Lanka from FIFA
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) March 16, 2023
Details: https://t.co/2K3Lr2zHwS pic.twitter.com/wcQWvsgFrI