பிட்காயின் மோசடி மூலம் 1,375 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபர் ஏப்ரல் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
BINANCE ஊடாக நிதி மோசடி செய்ததற்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரை நேற்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபர் குறித்த பெண்ணிடம் அவளுக்கு சொந்தமான பிட்காயின்களை அதிகரித்து கொடுப்பதாக உறுதியளித்து, அவளை ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)