மொரட்டுவை - கல்தேமுல்ல பிரதேசத்தில் குப்பை கூழமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கிசை காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் தம்பதியொன்றே காயமடைந்துள்ளனர் என்றும் அவர்களது மகளின் முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் இடத்துக்குச் சென்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முறைப்பாட்டாளரின் தாயும் தந்தையும் தமது வீட்டிற்கு அருகில் உள்ள குப்பை மேட்டில் தீ வைத்ததாகவும், அங்கு பெரும் சத்தத்துடன் இனந்தெரியாத பொருளொன்று வெடித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அங்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், வெடித்த பொருள் என்பதை கண்டறிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெடிப்பு சம்பவத்தில் பெண்ணின் இடுப்பு மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆணின் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.