இலங்கை பாராளுமன்றத்திற்கு அண்மித்த தியவன்னா ஓயாவில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அவரது அடையாளத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.