உலக அளவில் பலாராலும் பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்களில் ஒன்று டுவிட்டர் செயலி; தற்பொழுது இந்த டுவிட்டர் செயலியை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கையகப்படுத்தினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்தே பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில், டுவிட்டரில் அதிகார்வபூர்வ கணக்குகளுக்கான புளு டிக் வசதிக்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இநிலையில், டுவிட்டர் செயலியை போல பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் செயலியிலும் அதிகார்வபூர்வ கணக்குகளுக்கு புளு டிக் வசதி மேற்கொள்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இந்த இன்ஸ்டாகிராம் செயலி மற்றும் வாட்ஸ்அப் செயலி ஆகியவை உலகின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானது.
மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி வெளியிட்ட அறிவிப்பின்படி, இனி பேஸ்புக், இன்ச்டாகிராம் ஆகியவற்றின் புளு டிக் வசதியை பெறுவதற்கு மாதம் 11.99 டாலரும், அதுவே ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு 14.99 டாலரும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை முதலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நாடுகளுக்கும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.