உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, புதிய திகதிகள் எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது.
அதன்படி, ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.