சனிக்கிழமை (11) பிலியந்தலை பிரதேசத்தில் நீதவான் ஒருவரின் வாகனத்தை திருடிய 27 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில், சந்தேக நபர் வத்தளை ஒலியமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருடப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவா தெரிவித்தார்.
சந்தேக நபர் நீதவானை அவரது சொகுசு வீட்டின் அறையில் அடைத்து வைத்துவிட்டு அவரது காரை திருடிச் சென்றதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிலியந்தலை, மடபாத பிரதேசத்தில் உள்ள அவரது சொகுசு வீட்டை, இணையத்தளத்தில் வாடகைக்கு விடுவதாக நீதவான் விளம்பரம் செய்ததையடுத்து, சந்தேக நபர், வீட்டை பரிசோதிக்க வந்ததை அடுத்து, இந்த சம்பவம் நடந்துள்ளது.
சோதனையின் போது சந்தேகநபர் நீதவானை மாடியில் உள்ள அறையொன்றில் வைத்து பூட்டிவிட்டு அவரது காரை திருடிச் சென்றுள்ளார். கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து நீதவான் அறையிலிருந்து ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபர் வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கரவண்டியின் ஊடாக குறித்த இடத்திற்கு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில், சந்தேக நபர் வத்தளை ஒலியமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருடப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவா தெரிவித்தார்.
சந்தேக நபர் நீதவானை அவரது சொகுசு வீட்டின் அறையில் அடைத்து வைத்துவிட்டு அவரது காரை திருடிச் சென்றதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விளம்பரம் |