வரிச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலி முகத்திடல் மைதானத்திற்குள் பிரவேசிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை காவல்துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே, பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட 8 தொழிற்சங்கங்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வரிச் சட்டத்திற்கு எதிராக துறைமுகம், நீர், மின்சாரம் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்று பிற்பகல் ஒல்கொட் மாவத்தையிலிருந்து காலி முகத்திடல் வரையாக வீதி கோட்டை தொடரூந்து நிலையத்துக்கு முன்னபாக தடைப்பட்டுள்ளது.