வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை நன்கு திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையின் ஏகமனதான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதற்காக கண்டியை கட்டுகஸ்தோட்டையுடன் இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபை, கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு, மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் நகர திட்டமிடல் துறையில் நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நிறுவப்படும். இந்தக் குழு கட்டுகஸ்தோட்டை, கண்டி மற்றும் குண்டசாலை பிரதேசங்களுக்கான விரிவான அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிக்கும், உட்கட்டமைப்பு, வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதில் குறிப்பிட்ட கவனம் செலுத்தும்.
இத்திட்டம் தொடர்ந்து நடைபெறுவதை உறுதிசெய்ய, ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் குழு கூடி முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து தேவையான மாற்றங்களைச் செய்யும்.
நேற்று (19) இரவு கண்டி வீதிகளில் ஊர்வலமாகச் சென்ற ஜனராஜ பெரஹராவைத் தொடர்ந்து, அமைச்சரவைக் கூட்டம் கண்டியில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. (யாழ் நியூஸ்)