ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு யாழ். - பலாலி சர்வதேச விமான நிலையத்தின் தீர்வையற்ற (Duty Free) வர்த்தக வளாகத்தின் முதலாவது தொகுதி நேற்று (11) திறந்து வைக்கப்பட்டது.
சிவில் விமான சேவைத் தலைவர் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என சிவில் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.