eleccal.numbers.lk என்ற மின்கட்டண கணக்கீட்டு இணையத்தளத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின் மின்கட்டணம் தொடர்பான விவரங்களை இப்போது சரிபார்க்கலாம்.
numbers.lk இன் படி, 90 அலகுகளுக்கான திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணம் 4,543.59 ரூபாயாக அதிகரித்துள்ளது.
numbers.lk, ஆறு மாதங்களுக்கு முன்பு 90 யூனிட்டுகளுக்கான மின்சாரக் கட்டணம் ரூ.861 ஆக இருந்ததாக
ட்விட்டர் பதிவொன்றில் சுட்டிக்காட்டியது.
மேலும், 90 யூனிட்டுக்கு பின்னர் ஒரு யூனிட்டை கூடுதலாக பயன்படுத்தினால், மின் கட்டணம் ரூ. 923.08 அதிகரிக்கும் என்றும், மொத்த கட்டணமாக ரூ.5,466.67 ஆக இருக்கும் என்றும் அது சுட்டிக்காட்டியது. (யாழ் நியூஸ்)