பணப்பற்றாக்குறை காரணமாக நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகச் செயலாளர், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
|
விளம்பரம் |
இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், தற்போதைய நெருக்கடியான நிலையில் உபகரணங்கள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் உயிர்களைக் காப்பாற்ற நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். (யாழ் நியூஸ்)