தபால் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டபோது, இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான 50% தபால் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டதாக அரசாங்க அச்சுத் திணக்களம் தெரிவித்துள்ளது.
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு சுமார் 400 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதுவரை 40 மில்லியன் ரூபாவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதித் தலைவர் நுவான் புத்திக தெரிவித்தார்.
ஒரு அரச நிறுவனத்திடம் இருந்து மற்றுமொரு அரச நிறுவனத்திற்கு சேவைகளை வழங்குவதில் பணம் இல்லாவிட்டால், அது செய்யப்படாது என அரசாங்கம் சுற்றறிக்கை விடுத்துள்ளதாகவும், அச்சிடுவதற்கு மீதி 360 மில்லியன் ரூபா செலவழிக்கப்படுவதற்கு யார் பொறுப்பேற்பது என்பதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)