தேர்தலினை நடத்தாமல் இருக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, திறைசேரி நாளாந்த நிதி நிலைமை தொடர்பில் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கடன் மறுசீரமைப்பு செய்யப்படாவிட்டால் கடனை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஏப்ரல் மாதத்திற்குள் கடன் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் திறைசேரியின் செயலாளரும் நீதிமன்றில் முன்வைத்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

விளம்பரம் |