ஏற்கனவே இடம்பெற்ற நில நடுக்கத்தில் சுமார் 45 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில்,
மீட்புப் பணிகள் இன்னும் முடியாத நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே இப்போது துருக்கியில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அங்கு சுமார் இரண்டு கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3ஆக பதிவானதாகவும் ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.