வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கான கடனுதவியை வங்கிகள் வழங்க முடியாமையினாலும், டொலரின் பெறுமதி வீழ்ச்சியாலும் வாகன உதிரி பாங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கொழும்பு - பஞ்சிகாவத்த வாகன உதிரிப் பாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான கடனுதவி கிடைக்கப்பெறாததாலும், டொலரின் பெறுமதி வீழ்ச்சியாலும் வாகன உதிரிப் பாகங்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களுக்கு அதிக தட்டுப்பாடு இல்லையென்றாலும், இங்கையில் அதிகளவில் பயன்படுத்தப்படும் ஜப்பானிய புதிய மற்றும் பழைய வாகனங்களின் உதிரி பாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதுடன், அதன் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு 12,000 - 15,000 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட உதிரிபாகங்கள் தற்போது 45,000 - 50,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.