வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை விரைவில் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
ஓமானுக்கு சென்றுள்ள அமைச்சர் மனுஷ நாணயக்கார அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயப்படுத்துமாறு ஓமான் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், டிஜிட்டல் மயமாக்குவதற்கான பணிகள் விரைந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார்.