பாகிர் மரிக்கார் அவர்களின் மறைவுக்குப் பின்பு பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து இறுதியில் ரனில் விக்ரமசிங்க அவர்களின் ஆட்சியில் அவருடன் ஏற்பட்ட அரசியல் மோதல் காரணமாக அரசியலை விட்டு சற்று ஒதுக்கினார் இம்தியாஸ் பாகிர் மரிக்கார் அவர்கள்.
அதனைத் தொடர்ந்து ஸஜித் பிரேமதாசா அவர்கள் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் ஏற்பட்ட அரசியல் பிரிவினைக் தொடர்ந்து, மீ்ண்டும் சஜித் பிரேமதாசாவுடன் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார் இம்தியாஸ் பாகிர் மரிக்கார்.
பேருவளை மக்களின் செல்வாக்கைப் பெற்று பல முறை பாரளுமன்றம் சென்ற இம்தியாஸ் பாகிர் மரிக்கார் அவர்கள், பேருவளை அரசியல் விடயங்களில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வந்தார்.
பேருவளை நகரசபை அரசியலில் பாகிர் மரிக்கார் குடும்பமும், பளீல் ஹாஜியார் குடும்பமும் மாறி மாறி ஆட்சி செலுத்தி வந்தனர்.
இதனடிப்படையில் கடந்த நகரசபை தலைவர் பதவியையையும் இம்தியாஸ் பாகிர் மரிக்காரின் மைத்துனர் மஸாஹிம் முஹம்மத் அவர்களே பதவி வகித்தார்.
இம் முறையும் நகரசபை தேர்தலில் SJB இல் போட்டியிட மஸாஹிம்வு முகம்மத் அவர்களுக்கு வாய்பு வழங்குவதாக இம்தியாஸ் பாகிர் மரிக்கார் அவர்களுக்கு உறுதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இறுதிக் கட்டத்தில் முடிவு மாற்றப்பட்டு முன்பு நகரசபை தேர்தலில் போட்டியிட்ட தஹ்லான் மன்ஸுர் அவர்களுக்கு தலைமை வேட்பாளர் பதவி வழங்கப்பட்டது.
இதற்கான காரணமாக முன்னர் மஸாஹிம் முஹம்மத் அவர்களின் நிர்வாக காலத்தில் மக்களுடன் அவர் நடந்து கொண்ட விதம், பேருவளை நகர சபை நிர்வாகத்தின் கடுமையான ஊழல், மற்றும் மஸாஹிம் முகம்மத் அவர்களின் காலப் பகுதியில் பேருவளை நகரம், உற்பட கிராம அபிவிருத்தி வேலைகள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டமை போன்றவை மீ்ண்டும் அவரை தலைமை வேட்பாளராக நியமிக்கப்படுவதை மக்கள் கடுமையாக எதிர்த்தமை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக மஸாஹிம் முகம்மத் அவர்களுக்கு வழங்கப்படவிருந்த தலைமை வேட்பாளர் பதவி இறுதிக் கட்டத்தில் தஹ்லான் மன்சூர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதனை அடுத்து இம்தியாஸ் பாகிர் மரிக்கார் தனது அதிருப்தியை தெவித்துள்ளதோடு தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்வார் என பேருவளை அரசியல் அவதானிகள், ஆதரவாளர்கள் தெவிக்கின்றனர்.
( பேருவளை ஹில்மி )