மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் அனைத்து தொழிற்சாலை உற்பத்திகளின் விலைகளும் நூற்றுக்கு 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அறிவித்துள்ளது.
அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின் கட்டண அதிகரிப்பினால் சோறு பொதி, ப்ரைட் ரைஸ், மற்றும் கொத்து ஆகியவற்றின் விலையானது நூற்றுக்கு 10 வீதம் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அப்பம் உள்ளிட்ட ஏனைய கோதுமை உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.