தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வெளிநாட்டவரான பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
விபத்தின் போது காரில் பயணித்த ரஷ்ய பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரஷ்ய பிரஜையை காலியில் இருந்து விமான நிலையத்தில் இறக்கி விடுவதற்காக காரின் சாரதி சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)