துருக்கியில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து காணாமல் போன இலங்கைப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் அவரது மகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
கண்டி - கலகெதரவில் இருந்து 20 வருடங்களுக்கு முன்னர் துருக்கிக்கு சென்ற, 69 வயதுடைய இலங்கைப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த 06 ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து, அங்கு வசித்துவந்த 15 இலங்கையர்களும் பாதிப்புகள் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், துருக்கியில் வசித்துவந்த பெண்ணொருவர், நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல்போயிருந்த நிலையில் அவரை தேடி தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே அவரது சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.