2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொடர்ச்சியான ஒதுக்கீடுகளை 6% குறைக்குமாறு நிதி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நிதி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபன தலைவர்கள், சட்ட சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இந்த சுற்றறிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலவினங்களைக் குறைப்பதற்கான அடையாளம் காணப்பட்ட முறைகளைக் கொண்ட திருத்தப்பட்ட செலவு மதிப்பீடுகள் பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய வரவு செலவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(யாழ் நியூஸ்)