வெல்லவாய - புத்தல பகுதியில் இன்று (11) அதிகாலை மீண்டும் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்த நிலநடுக்கம் 2.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் நேற்று சிறிய நிலநடுக்கம் பதிவாகியது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை அறிவித்துள்ளது.
இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.