அளுத்கம - மத்துகம பிரதேசத்தின் கல்மந்த பிரதேசத்தில் நபர் ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் வலகெதெர குருதிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் வீட்டுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நேற்று மாலை தனது வீட்டை விட்டு வெளியேறி சந்தேக நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து சந்தேகநபர்கள் குறித்த நபரை தாக்கியுள்ளனர். இதன் பின்னர் காயமடைந்த நபர் சீனவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை வெலிபென்ன பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)