3 சகோதரிகளுடன் காதல் திருமணம்...! கிழமை வாரியாக அட்டவணையை போட்டு மல்லுக்கட்டும் இளைஞர்...!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

3 சகோதரிகளுடன் காதல் திருமணம்...! கிழமை வாரியாக அட்டவணையை போட்டு மல்லுக்கட்டும் இளைஞர்...!

மூன்று சகோதரிகள் ஒரே ஆணை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கென்யா,

ஒரே நபர் பலரை திருமணம் செய்வதற்கு பெரும்பாலான நாடுகளில் அனுமதி இல்லை என்றாலும், சில நாடுகளில் பல பெண்களை திருமணம் செய்த நபர்கள் பற்றி அவ்வ போது செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. கென்யாவில் இதுபோன்ற பல விசித்திர திருமணங்கள் பற்றி பல செய்திகள் வெளிவரும் நிலையில், ஒட்டிப்பிறந்த மூன்று சகோதரிகள் ஒரே ஆணை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேத், ஈவ் மற்றும் மேரி என்ற மூன்று சகோதரிகளும் காஸ்பல் இசையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மூவரும் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற நபரை திருமணம் செய்துகொண்டதாக டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலில் கேத் தான் ஸ்டீவோவை சந்தித்துள்ளார். பின்னர் கேத்தின் சகோதரிகளை சந்தித்த ஸ்டீவ், அவர்களிடம் பேசி பழகியபோது, தான் ஒரு பெண்ணுக்காக மட்டும் இறைவன் படைக்கப்படவில்லை என்பதை உணர்ந்தாராம். உடனே மூன்று பேரையும் திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்ததாகக் கூறுகிறார் ஸ்டீவோ.

மேலும், மூன்று பெண்களுடனும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்டீவோ பேசுகையில், மூன்று பெண்களின் தேவைகளை திருப்திப்படுத்துவது சாத்தியமானதா என கேட்பவர்களுக்கு ஒன்றை கூறுக்கொள்கிறேன், மூன்று பேரையும் திருப்திப் படுத்துவது எனக்கு சிரமமாக இல்லை. அது ஒரு பெரிய விஷயமே கிடையாது என்றார். 3 பேருடனும் சமமாக நேரம் செலவிட நான் கடுமையான அட்டவணையை பின்பற்றுகிறேன். வாரந்தோறும் திங்கட்கிழமைகளை மேரிக்காகவும், செவ்வாய்க்கிழமைகளை கேத்திற்காகவும், புதன்கிழமைகளை ஈவிற்காகவும் ஒதுக்கியுள்ளேன் என்றார்.

ஆனால் அதேநேரத்தில் மூன்று சகோதரிகளும் குடும்பம் மற்றும் பிற தேவைகளை பூர்த்திசெய்வதில் கொஞ்சம் சிரமாக இருப்பதாக கூறுகின்றனர். மேலும் தாங்கள் மூன்று பேர் மட்டும் ஸ்டீவோவிற்கு போதுமானவர்கள் என்றும், வேறொரு பெண்ணை வாழ்க்கைக்குள் கொண்டுவர நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.