தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் பிரதிநிதிகள் உட்பட 26 பேருக்கு கொழும்பு வைத்தியசாலை சதுக்க வலயத்திற்குள் பிரவேசிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, தேசிய வைத்தியசாலை, கண் வைத்தியசாலை, இருதய வைத்தியசாலை மற்றும் மருதானை பிரதான வைத்தியசாலை சதுக்கங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய வகையில் போராட்டக்காரர்கள் அருகில் உள்ள பகுதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து் இருந்து டீன்ஸ் வீதி, சீமன்ஸ் வீதி சந்தி வரையிலான வீதி மற்றும் நடைபாதைகளை மறித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகை மற்றும் நிதி அமைச்சின் அலுவலகம் மற்றும் காலி முகத்திடலுக்குள் இந்த 26 ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிக்க கோட்டை நீதவான் நீதிமன்றமும் இன்று காலை உத்தரவிட்டிருந்தது.
எனினும் அமைதியான முறையில், பொது சொத்துக்களுக்கு பாதிப்பின்றி போராட்டம் நடத்த எந்த தடையும் இல்லை என இந்த உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.