8 அணிகள் பங்குபற்றிய 15 வயதுக்கு உற்பட்ட T-10 கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர் - அபாரமாக விளையாடி மடவளை மதீனா தேசியக் கல்லூரி சாம்பியன் ஆனது.
ஒன்ஸ்லெட் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 8 அணிகள் கொண்ட 15 வயதுக்கு உற்பட்ட T-10 கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர் பிப்ரவரி மாதம் 14 மற்றும் 15 இரு தினங்கள் உக்குவளை பிரபுத்த கிரிக்கெட் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் இப்போட்டி தொடரில் அபாரமாக விளையாடிய மடவளை மதீனா தேசியக் கல்லூரி அனைத்து அணிகளையும் வென்று சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இறுதிப்போட்டி அணிக்கு ஐந்து ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மடவலை மதினா தேசியக் கல்லூரி 5 ஓவர்கள் முடிவில் இரு விக்கட்டுகள் இழப்பிற்கு 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடிப்பெடுத்தாடிய ரோயல் அகாடமி கலகம் 5 விக்கெட்டுக்களை இழந்தது 39 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது.
38 ஓட்டங்களால் மதினா தேசியக் கல்லூரி வெற்றி பெற்றது.
- Nafees Mohamed