எதிர்பார்த்த மழை பெய்யாததால் நீர்மின்சார உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தடை விதித்துள்ளதால் 2 மணித்தியால 20 நிமிட மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.
இதற்கிடையில், 331,000 இற்கும் அதிகமான மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெப்ரவரி 17 ஆம் திகதி வரை எந்தவொரு திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கும் தாம் அனுமதியளிக்கப் போவதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
"இந்த காலப்பகுதியில் இதுபோன்ற மின்வெட்டுகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமானதாக கருதப்படும்" என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

(யாழ் நியூஸ்)