நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் வரை உள்ளது.
இதற்கிடையே, கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற ஜெசிந்தா கூட்டம் முடிந்தபின் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், நியூசிலாந்து பிரதமர் பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவிட்டேன். இப்போது அந்த பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். அதன்படி அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ம் திகதிக்குள் நான் பதவி விலக போகிறேன். இந்த முடிவுக்கு நான் என்னை தயார்படுத்தி கொண்டேன். எனது பதவிக்காலத்தில் நான் ஒரு சிறந்த மனிதனாக பணியாற்றி உள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும், அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். நான் போட்டியிடவில்லை என்றாலும் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியே அடுத்த தேர்தலில் அமோக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டர்ன் விலகுவதாக அறிவித்தது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நியூசிலாந்து நாட்டின் கல்வித்துறை மந்திரியாக இருந்து வரும் கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக நியமிக்கப்பட உள்ளார் என தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.