மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் சமர்ப்பித்த தனிப்பட்ட முறைப்பாடு இன்று (17) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவார்ட் கப்ரால் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி இந்த தனிப்பட்ட முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)