நிறைவேற்று அதிகாரம் இல்லாத அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கும், நிறைவேற்று அதிகாரிகளுக்கான சம்பளத்தை சில நாட்களுக்குப் பின்னர் வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் நடவடிக்கைகள் தொடர்பில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2023ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் புதிய வருமான முன்மொழிவுகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பெறுவதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பதால், அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(யாழ் நியூஸ்)