நானுஓயா விபத்தில் உயிரிழந்த ஏழு பேரில் மூன்று சிறுவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா, நானுஓயாவில் நேற்று மாலை பஸ், முச்சக்கர வண்டி மற்றும் வேன் ஒன்றுக்கு இடையில் விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதியுடன் வேனில் பயணித்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பஸ்ஸில் கல்விச் சுற்றுலா சென்ற கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் பயணித்துள்ளனர்.
வேனில் பயணம் செய்தவர்களில் 08 வயது மற்றும் 12 வயதுடைய சிறுமிகள் இருவரும் 13 வயது சிறுவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
26 மற்றும் 27 வயதுடைய மூன்று நபர்களும், 43 வயதுடைய பெண் ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
வேனில் இருந்து உயிரிழந்தவர்கள் ஹட்டனை சேர்ந்தவர்கள். (யாழ் நியூஸ்)