ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சிரேஷ்ட உப தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, கட்சியில் இருந்தும் கட்சியில் வகிக்கும் பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)